What an interesting facts about Ants?
எறும்புகள் பற்றிச் சில விந்தையான தகவல்களைப் பார்ப்போமா?
# பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எண்ணிக்கை பூமியில் உள்ள மொத்த மனிதர்களின் எண்ணிக்கைக்குச் சமனானது எனப் பல ஆய்வுகள் கூறுகின்றன!
# எறும்புகள் டைனோசர்களின் காலத்திலிருந்தே இருக்கின்றன. எறும்புகளில் குறிப்பிடத்தக்க பரிணாமம் நடைபெற்று சுமார் 130 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) ஆண்டுகள் ஆகின்றன.
# உலகம் முழுவதும் சுமார் 10,000 முதல் 12,000 வகையான எறும்புகள் வாழ்கின்றன.
# எறும்புகள் தனது எடையைவிட 20 - 50 மடங்கு அதிகமான எடையைத் தூக்க வல்லவை
# சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள் வரை உயிர் வாழும்.
# எறும்புகளுக்குக் காதுகள் கிடையாது, நடக்கும்போது எற்படும் அதிர்வுகளை வைத்தே சுற்றியுள்ள விஷயங்களை உணருகின்றன.
|
Ant Colony |
# எறும்புகளில் அதிகாரம் உள்ள எறும்புக்கு ராணி எறும்பு என்று பெயர்.
# எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன. ஒன்றை அதன் தேவைக்காகவும், மற்றதை ஏனைய எறும்புகளுக்காகவும் பயன்படுத்தும்.
# எறும்புகள் பல்வேறு அளவில் இருக்கின்றன. சில எறும்புகளைப் பூதக்கண்ணாடியைப் பயன்படுத்திதான் பார்க்க முடியும். அதிகபட்சமாக 3 அங்குலம் அளவுள்ள எறும்புகளும்கூட இருக்கின்றன.
# எறும்புகள் எப்போதும் தனித்து வாழாது! கூட்டம் கூட்டமாகவே வாழும். இக்கூட்டத்தை ‘காலனி’ என்பார்கள்.
# சில எறும்புகள் நீந்தக்கூடியவை. பொதுவாக 24 மணி நீரம் நீருக்கடியில் உயிருடன் வாழும் திறன் எறும்புகளுக்கு உண்டு.
# எறும்புகள் தமக்கு தேவையான உணவுகளை விவசாயம் செய்யக்கூடியவை. விவசாயம் செய்யும் அந்த எறும்பின் பெயர் இலை வெட்டி எறும்பு.
Courtesy: Google and Tamil Hindu